5 முறை பைனலில் தோல்வி! இவரா கேப்டன் என எள்ளி நகையாடிய கிரிக்கெட் உலகம்! சாதித்துக் காட்டிய முன்னாள் சிஎஸ்கே வீரர்!
Gayana warriors won the CPLT20 tittle after 5 final lose
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போலவே, மேற்கிந்திய தீவுகள் நாட்டில் கரிபியன் பிரிமியர் லீக் ஆனது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த போட்டி தொடரில் இந்த வருடத்திற்கான சீசனில் முதல் முறையாக கயானா வாரியரஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறது.
இந்த அணி சாம்பியன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கு ஐந்து முறை முயற்சித்து தோல்வியுற்று, ஆறாவது முயற்சியில் இந்த முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.
இந்த அணியின் கேப்டனாக யார் இருக்கிறார் என்று கேட்டால், அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆம்! மிக மூத்த வீரரான 44 வயதான தென்னாபிரிக்காவின் இம்ரான் தாகிர் தான் இந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். அவரை கேப்டனாக நியமித்ததும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எள்ளி நகையாடியது. ஆனால் அவரையும் நம்பி இந்த அணி நிச்சயம் பந்தயம் அடிக்கும் என ஆருடம் சொன்னவர் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
வெற்றி குறித்து இம்ரான் தாஹீர் உருக்கமாக பேசும்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே என்னை நம்பி, என் தலைமையில் இந்த அணி நிச்சயமாக சாம்பியன் கோப்பையை வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், என்னை கேப்டனாக அறிவித்ததும், எள்ளி நகையாடியவர்களுக்கும் என் நன்றி. அவர்களும் எனக்கு உத்வேகம் அளித்துள்ளார்கள்" என்று இம்ரான் தாஹீர் பேசினார்.
த்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி போட்டியில், கயானா வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பொல்லார்ட், பூரான், பிராவோ, ரசல், நரைன் என நட்சத்திர வீரர்கள் அடங்கிய அணியானது வெறும் 94 ரன்களுக்குள் அடங்கிவிட்டது. பின்னர் களமிறங்கிய கயானா வாரியர்ஸ் அணி 14 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.
கயானா வாரியர்ஸ் அணி முன்னதாக 2019, 2018, 2016, 2014, 2013 என ஐந்து முறை இறுதிப் போட்டி தகுதி பெற்றும் ஒரு முறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை.
ஆனால் இன்று 44 வயது ஆன இம்ரான் தாகீர் தலைமையில் அந்த அணி சாதித்து இருக்கிறது. தமிழக வீரர் அஸ்வின் சொன்னது போலவே அந்த அணி பந்தயம் அடித்து இருக்கிறது. இம்ரான் தாஹிரை எள்ளி நகையாடிய அனைவரின் முகத்தில் கரியும் பூசப்பட்டுவிட்டது.
English Summary
Gayana warriors won the CPLT20 tittle after 5 final lose