குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கமே சிக்கல்.. முக்கிய வீரர் விலகல்.!! - Seithipunal
Seithipunal


15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன. 

10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.  ஐபிஎல் 2022 15-வது சீசனின் முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடக்கி மே 29 தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படெல் அறிவித்துள்ளார். 

இந்த முறை ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Group A-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும், Group B-யில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு குரூப்பில் இருக்கும் ஒவ்வொரு அணியும், எதிர் குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் 1 முறை விளையாடும். 1 அணி உடன் மட்டும் இரண்டு முறை விளையாயிடும். அதேபோல், அதே குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் 2 முறை விளையாடும். 

இந்நிலையில், ஐபிஎல் 2022-15 வது சீசனில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார். ஜேசன் ராய் தொடர்ந்து பயோ - பபுள் பாதுகாப்பில் இருந்ததால் சோர்வும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதால், அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Titans player Jason Roy withdraws from IPL 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->