#IPL2022 : லக்னோவை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி.!
Gujarat Titans won by 62 runs against Lucknow super Giants
லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியை 62 வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணிகள் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 63 ரன்களும், டேவிட் மில்லர் 26 ரன்களும் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, குஜராத் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்த அடுத்த முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் லக்னோ அணி 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.மேலும், 18 புள்ளுகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
English Summary
Gujarat Titans won by 62 runs against Lucknow super Giants