வரலாற்றுச் சாதனையை படைத்த இந்தியா! இதுவே முதல்முறை!
Hangzhou AsianParaGames TeamIndia
சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடந்துவரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், 4-வது நாள் முடிவில் இந்தியா 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கலம் என 82 பதக்கங்களை குவித்து உள்ளது.
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிகஅளவிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும். முன்னதாக கடந்த 2018-ம்ஆண்டு இந்தோனேஷியாவில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் உட்பட 72 பதக்கங்களை வென்றிருந்தது.
இந்த முறை 2 நாட்கள் போட்டி இன்னும் எஞ்சியுள்ள நிலையில், தற்போது இந்தியா 82 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது.
இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று இந்தியா மேலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
பெண்கள் காம்பவுண்ட் ஒபன் வில்வித்தை மற்றும் ஆண்கள் 1500 மீட்டர் டி38 ஓட்டம் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றனர்.
பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் தற்போதுவரை 21 தங்கம், 26 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 90 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 5ம் இடம் பிடித்து வரலாற்றுச்சு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
English Summary
Hangzhou AsianParaGames TeamIndia