இந்திய அணியில் முதலில் இவரை வெளியே உட்கார வையுங்கள்.. முன்னாள் வீரர் ஹர்பஜன் எச்சரிக்கை.!
Harbhajan Singh speech about Indian team change
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 2 போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்விய என 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில் இந்திய அணி நாளை மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் வங்கதேச அணியுடன் மோதுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங் 'கே எல் ராகுல் தடுமாறி வருகிறார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம். அப்படி இல்லையென்றால் தினேஷ் கார்த்திக் காயத்தால் விளையாடவில்லை என்றால் ரோகித் சர்மாவுடன் ரிஷப் பந்த்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி பார்க்கலாம்.
அதேபோல், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக சஹாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். தென் ஆப்பிரிக்கா போட்டியில் அஸ்வினின் பந்து சுத்தமாக எடுபடவில்லை யுஸ்வேந்திர சஹால் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் அவர் தேவையான விக்கெடுகளை எடுத்துக் கொடுப்பார். எனவே சஹாலை கட்டாயமாக களமிறக்க வேண்டும்' என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
Harbhajan Singh speech about Indian team change