அந்த பதற்றம்! அட உண்மைங்க - 2011 உலகக்கோப்பை செஞ்சுரி குறித்து மனம்திறந்த விராட் கோலி! - Seithipunal
Seithipunal


2011 ஐசிசி உலக கோப்பை அறிமுகப் போட்டியில் தான் ஆடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி ஆட்டக்காரருமான விராட் கோலி மனம் திறந்து உள்ளார்.

2011 உலக கோப்பை தொடரில் விராட் கோலி கூறும் அந்த முதல் ஆட்டம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்றது. அப்போது இந்திய அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், சேவாக், யுவராஜ், ரெய்னா, மகேந்திர சிங் டோனி போன்ற சீனியர் வீரர்களுடன் ஒரு இளம் வீரராக விராட் கோலி களமிறங்கி இருந்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வீரேந்திர சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள், விராட் கோலி 83 பந்துகளில் சதம் கண்டத்துடன் இந்திய அணி 370 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி 283 ரன்களில் படுதோல்வியை சந்தித்தது. 

இந்த ஆட்டம் குறித்து விராட் கோலி தெரிவிக்கையில், அந்த ஐசிசி உலக கோப்பை தொடரின் ஆட்டத்தில் நான்தான் இந்திய அணியின் இளம் வீரர். உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கிரேட் பிளேயர்களுடன் களமிறங்கினேன்.

அப்போது எனக்கு ஒரு பதற்றமாக இருந்ததை நான் உணர்ந்தேன். உண்மையாகவே இதை கூறுகிறேன். இதில் பொய் எதுவும் இல்லை.

இந்த தொடர் வித்தியாசமான ஒரு சூழ்நிலையும், உற்சாகத்தையும் கொடுத்தது. அதை என்னால் உணர முடிந்தது. போட்டிக்கு முன்பாக நான் ரொம்ப பதட்டத்துடன் இருந்தேன். ஒருவகையில் இது நல்லது தான். ஏனெனில் ஒரு எச்சரிக்கை தரும் சூழ்நிலையை என் உடல் தயாராக இருந்ததாகவே அது பொருள்படும். எனக்கு அந்த பதற்றம் உதவியாகத்தான் அமைந்தது.

அந்தப் பதற்றம் தான் எனது எச்சரிக்கை உணர்வை கூர்மைப்படுத்தி வருகிறது. இதனால் தான் என் திட்டத்தை துல்லியமாக செயல்படுத்த முடிந்தது" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தற்போது ஐசிசி உலக கோப்பை தொடர்களில் விராட் கோலி நான்கு ஒருநாள் உலகக் கோப்பை, 4 டி20 உலக கோப்பை என 8 தொடர்களில் களமிறங்குள்ளார். தற்போது ஒன்பது உலக கோப்பை தொடரில் விராட் கோலி களமிறங்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC 2011 T20 WC Virat 100 IND vs BAN


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->