இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி.. ஜடேஜா விதிமீறல்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிப்ரவரி 9 தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா ரசிகர்கள் மற்றும் செய்தி சேனல்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி நிர்வாகம்   இதற்கு விளக்கம் அளித்திருந்தது. அதன்படி, ஜடேஜா தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும் அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது. இந்த விளக்கத்தை கேட்ட நடுவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் நடுவர்களிடம் தெரிவிக்காமல் வலி நிவாரணி பயன்படுத்தியதற்காக ஐசிசி ஜடேஜாவுக்கு அபராதம் விதித்துள்ளது. அதன்படி, ஐசிசி விதிமுறைகளின்படி லெவல் 1 விதிமீறலில் ஈடுபட்ட ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 டிமெரிட் புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC fined 25 percent match fees to jadeja for Ball tampering


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->