டெட் பால் விவகாரம்! மேத்யூ வெட்-க்கு வேட்டு வைத்த ஐசிசி!
ICC T20 2024 ENG vs AUS
டி20 உலக கோப்பை தொடரில் கடந்த ஜூன் 8ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையான லீக் ஆட்டத்தில், 18 ஓவரை இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் வீசினார்.
அந்த ஓவரில் அவர் வீசிய ஒரு பந்து டெட் பாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வெட் அப்பந்தை அடிக்காமல் தவிர்த்து விட்டார்.
ஆனால் நடுவர் நித்தின் மேனன் அந்த பந்தை டெட் பால் என்று அறிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேத்யூ வெட், நடுவர் நிதின் நித்தின் மேனன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு மதிப்பளிக்காமல் செய்யும் செயல் ஆகும். இப்படி விதி மீறலில் ஈடுபட்டால் ஐசிசி சார்பில் கண்டனம் தெரிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஐசிசி ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வெட்-க்கு கண்டனம் தெரிவித்து, எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வழக்கமாக நடுவரிடம் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் கண்டனத்துடன் அபராதமும் விதிக்கப்படும். ஆனால் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வெட் தனக்கு அபராதம் மிதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும் மேத்யூ வெட் தான் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடந்து கொண்ட விதம் தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு உள்ளார் என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.