இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐசிசி ரேங்கிங்!   - Seithipunal
Seithipunal


சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில், இந்தியாவின் சூரியகுமார் யாதவ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளார்.

ஐசிசி டி20 தரவரிசையில் அக்டோபர் 30, 2022ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை முதலிடத்தில் இருந்துவந்த சூர்யகுமார் யாதவ், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து, சராசரி 29.80, ஸ்டிரைக் ரேட் 139.25ஆக குறைந்ததால் அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதே சமயத்தில், ஆஸி. அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் இந்த தொடரில் அதிரடியாக விளையாடிய 255 ரன்கள், சராசரி 42, ஸ்டிரைக் ரேட் 158 எடுத்தாததால் நான்கு இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் பிலிப் சால்ட் - 816 புள்ளிகள் உடனும், நான்காவது இடத்தில் பாபர் அஸாம் - 755 புள்ளிகள் உடனும் உள்ளனர்.

ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வான்
ஆறாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர்,
ஏழாவது இடத்தில் இந்திய வீரர் ஜெய்ஸ்வாலும் இடம் பிடித்துள்ளனர்.

சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி உள்ளது. இன்னும் சில வருடங்கள் இந்திய அணியை முதலிடத்திலிருந்து இறக்குவது என்பது கடினம் என்னும் அளவுக்கு 14108 புள்ளிகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC T20 Ranking Batting june 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->