''தமிழ்நாட்டில் பெரியார் இன்னும் வலுவானவராக இருக்கிறார் ஏன் தெரியுமா?'' விஜய் அதிரடி பதில்..!
Do you know why Periyar is still strong in Tamil Nadu Vijay reply
தமிழ்நாடு ஏன் இன்றும் தந்தை பெரியாரை போற்றுகிறது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா..? என்ன என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது 'x' தளத்தில் கூறியிருப்பதாவது:- பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதி மந்திரி அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!? குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
மத்திய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு? பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும்! என்று விஜய் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Do you know why Periyar is still strong in Tamil Nadu Vijay reply