டி20 உலகக்கோப்பை : இந்தியா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை.. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு.!
ICC T20 World Cup IND vs NED india won the toss choose to bat
டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த நிலையில் இன்று டி20 உலகக்கோப்பையில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
அணி விவரம்
இந்திய அணி 11 வீரர்கள் :
கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்(வி.கீ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
நெதர்லாந்து அணி 11 வீரர்கள் :
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், பிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.
டி20 உலக கோப்பையில் இந்தியா நெதர்லாந்து அணிகள் இதுவரை ஒரு முறை கூட விளையாடியது இல்லை. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
English Summary
ICC T20 World Cup IND vs NED india won the toss choose to bat