ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல்.. அதிரடியாக முன்னேறிய ரிஷப் பண்ட்.. டாப்-10-லிருந்து வெளியேறிய கோலி.!! - Seithipunal
Seithipunal


ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதன்படி, பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்  923 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே 879 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 826 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

11வது இடத்தில் இருந்த ரிஷப் பண்ட் 801 புள்ளிகளுடன் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 8வது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 746 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விராட்கோலி டாப்-10-லிருந்து வெளியேறியுள்ளார். 

பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 900 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 842 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.இந்திய வீரர் பும்ரா 828 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 384 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 335 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Test Ratting Rankings


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->