ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே அதிரவைத்த நவீன் உல் ஹக்! நேரம் பாத்து சந்திசிரிக்க வைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் மிக மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் இன்று நடக்கவுள்ள ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை, நடப்பு தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், அதிலிருந்து மீண்டு, தொடர்ந்து ஐந்து வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிபெறும் நிலையில் உள்ளது.

இன்று ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதியாகிவிடும். ஆனால், ஆப்கானிஸ்தான் அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியுமா என்றால்... முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளை அடுத்தடுத்து வெற்றிகொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மனதளவில் மிக வலிமையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். மேலும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அரையிறுதி செல்லும் வாய்ப்பையும் தக்க வைக்க முடியும் என்பதால், ஆப்கானிஸ்தான் அணி முழு பலத்தையும் வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கலாம். 

கூடுதலாக இந்திய ரசிகர்களின் முழு ஆதரவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இருப்பதால் கூடுதல் உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் விளையாடும்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களை வம்பிழுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

அவரின் அந்த அப்பதிவில், "மனித உரிமைகளை காரணம்காட்டி விளையாட மறுத்த ஆஸ்திரேலியா அணி, உலகக் கோப்பையில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதை காண சுவாரஸ்யமாக உள்ளது. மனித உரிமையா அல்லது இரண்டு புள்ளிகளா?" என்று நவீன் உல் ஹக் பதிவிட்டுள்ளார்.

ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் ஏன் இந்த பதிவை இப்போது தெரிவித்திருக்கிறார் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க இருந்தது.

ஆனால், ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட மறுத்தது.

இப்போது, அதே ஆஸ்திரேலியா ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாட சம்மதித்துள்ளதை தான், நவீன் உல் ஹக் நேரடியாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்றும் சொல்பவர்கள் பக்கம் நின்று பார்த்தால், நவீன் உல் ஹக் சரியான நேரத்தில் சரியான பதிலடியை திருப்பி கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். 

நவீன் உல் ஹக் கூட மூஞ்சில் அடித்ததுபோல பதிலடி கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு முன்பாகவே ரஷீத் கான் ஒரு பேட்டியில், "ஆஸ்திரேலியா வெளியேறியதைக் கேட்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அரசியலில் இருந்து கிரிக்கெட்டை விலக்கி வைக்க வேண்டும்" என்று மிக பக்குவமாக ரஷீத் கான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 AFG vs AUS match Naveen ul haq


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->