உலகிலேயே முதன்முறையாக.. விண்வெளியில் பயணத்தை தொடங்கிய ஐசிசி "உலக கோப்பை 2023"..!! - Seithipunal
Seithipunal


13-வது ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பாண்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை பூமியிலிருந்து 1,20,000 அடி உயரத்தில் விண்வெளியில் உள்ள ஸ்ட்ராடோஸ்பியரில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. உலக கோப்பை ஒரு பெஸ்போக் ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனால் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ விளையாட்டு கோப்பையாகும். இது தனது பயணத்தை விண்வெளியில் இருந்து தொடங்கி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ விளையாட்டு கோப்பை என்ற பெருமையை பெற்றுள்ளது ஐசிசி உலக கோப்பை 2023.

விண்வெளியில் உலக கோப்பையின் சில வியக்கக்கூடிய புகைப்படங்கள் 4K கேமராக்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இது குறித்து பேசிய ஐசிசி தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ், "ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபி சுற்றுப்பயணம் உலகக் கோப்பைக்கான கவுண்ட்டவுனில் ஒரு முக்கியமான மைல்கல் அமைய உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்

மேலும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "வேறு எந்த விளையாட்டையும் போல இல்லாமல் கிரிக்கெட் இந்தியாவை ஒன்றிணைக்கிறது. ஆறு வாரங்களுக்குள் உலகின் 10 சிறந்த அணிகளை ஒன்றிணைத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த இந்தியா தயாராகி வருவதால் நாடு முழுவதும் உற்சாகம் உருவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்

 உலகக் கோப்பை பயணிக்கும் நாள் மற்றும் நாடுகள்:

27 ஜூன் - 14 ஜூலை: இந்தியா

15 - 16 ஜூலை: நியூசிலாந்து

17 - 18 ஜூலை: ஆஸ்திரேலியா

19 - 21 ஜூலை: பப்புவா நியூ கினியா

22 - 24 ஜூலை: இந்தியா

25 - 27 ஜூலை: அமெரிக்கா

28 - 30 ஜூலை: மேற்கிந்தியத் தீவுகள்

31 ஜூலை - ஆகஸ்ட் 4: பாகிஸ்தான்

5 - 6 ஆகஸ்ட்: இலங்கை

7 - 9 ஆகஸ்ட்: பங்களாதேஷ்

10 - 11 ஆகஸ்ட்: குவைத்

12 - 13 ஆகஸ்ட்: பஹ்ரைன்

14 - 15 ஆகஸ்ட்: இந்தியா

16 - 18 ஆகஸ்ட்: இத்தாலி

19 - 20 ஆகஸ்ட்: பிரான்ஸ்

21 - 24 ஆகஸ்ட்: இங்கிலாந்து

25 - 26 ஆகஸ்ட்: மலேசியா

27 - 28 ஆகஸ்ட்: உகாண்டா

29 - 30 ஆகஸ்ட்: நைஜீரியா

31 ஆகஸ்ட் - 3 செப்டம்பர்: தென்னாப்பிரிக்கா

செப்டம்பர் 4ல் : மீண்டும் இந்தியா 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 sent to space


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->