சற்றுமுன் வெளியேறியது மற்றும் ஒரு அணி! பரிதாப நிலையில் பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்துமுடிந்த லீக் ஆட்டங்களில் அடிப்படையில், அரை இறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் முன்னேறியுள்ளன. 

நான்காவது அணியாக நியூசிலாந்து செல்லவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இலங்கையை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூஸிலாந்து அணி, ரன் ரேட் அடிப்படையில் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு இருந்தாலும், அது மிக மிக மிக மிக கடினமான ஒன்று. நாளை கொல்கத்தாவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, சாதனை வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்தால் மட்டுமே சாத்தியம். 

நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து முதலில் களமிறங்கினாள், அந்த அணியை 150 ரன்களுக்குள் சுருட்டி, அந்த இலக்கை 3.4 ஓவர்களில் எட்ட பாகிஸ்தான் வேண்டும். இதற்க்கு வாய்ப்பே இல்லை. 

இருக்கும் ஒரே வாய்ப்பு பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி இமாலய ரன்னை இலக்காக வைக்க வேண்டும். உதாரணத்திற்கு பாகிஸ்தான் அணி ஒரு 400, 450, 500 ரன்கள் அடித்து, இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 

ஆனால், பாகிஸ்தானின் முந்தைய லீக் ஆட்டங்களை பார்த்தால் இப்படியான ஒரு அசத்திய வெற்றிபெறும் அணியாக இல்லை. எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதேபோல ஒரு நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெறும் 244 ரன்கள் மட்டுமே எடுத்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 

ஏற்கனவே பங்களாதேஷ், இங்கிலாந்து, நெதர்லாந்து, இலங்கை ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC world cup Afghanistan Eliminated


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->