48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில்... புதிய சாதனையை பதிவு செய்த பாகிஸ்தான்!
ICC World cup Highest chase
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து, 344 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 122, சதீரா சமரவிக்ரமா 108 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 48.2 ஓவர்களில், 345 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 131 (நாட் அவுட்), அப்துல்லா ஷஃபிக் 113 ரன்கள் எடுத்தனர்.
இந்த அபார வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி பாகிஸ்தான் அணி ஒரு வரலாற்றுச் சாதனையையும் புரிந்துள்ளது.
48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்னை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.
முன்னதாக 2011 உலகோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி 329 ரன்னை சேஸ் செய்ததே வரலாறாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
ICC World cup Highest chase