உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணிகள் பட்டியல்!  - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை தொடர் 2023 இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில்  தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் மோசமான தோல்வியை தழுவிய அணிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி இடம் பிடித்துள்ளது. 

மேலும், 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 2015 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியிடம் 257 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

2007 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியிடம் 215 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்தில உள்ளது.

2011 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியிடம் 206 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பங்களாதேஸ் அணி நான்காம் இடத்தில உள்ளது.

உலகக்கோப்பை தொடர் மட்டுமில்லாமல் சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இரு மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

அதில், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியிடம் 221 ரன்கள் வித்தியாசத்திலும், 2018 ஆம் ஆண்டு இலங்கை அணியிடம் 219 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந் அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும். அதே சமயத்தில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா அணி  வெற்றிப் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World cup most run lose match record list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->