#BREAKING || ரவிச்சந்திரன் அஷ்வினின் வெறித்தனமான ஆட்டம்.! பரிதாப நிலையில் இந்திய அணி.!  - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. 

இதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். அவருடன் அதிரடி ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் களமிறங்கினார்.

22 க்கு மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த புஜாரா மூன்று ரங்களுக்கும், அஜிங்கிய ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹனுமா விஹாரி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆட, அவரும் 20 நாட்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 17 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கே எல் ராகுல் தனது அரை சதத்துடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி ஆட்டத்தால் டெஸ்ட் மேட்சை, ஒன் டே மேட்ச் போல் ஆடிக் கொண்டிருக்கிறார். தற்போது வரை அவர் 45 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன், 44 ரன்கள் சேர்த்துள்ளார். 

அவருக்கு துணையாக முகமது சமி 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறார். தற்போது வரை இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. 

தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, ஒளிவியர் மற்றும் மார்க்கோ ஜான்சன் அசத்தலாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை கைபற்றி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND v SA Second Test info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->