சென்னையில் இந்தியா v தென் ஆப்ரிக்கா ஆட்டம்.! பி.சி.சி.ஐ., வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இந்த 2022 ஆண்டில் விளையாடும் போட்டி தொடர்கள் குறித்த விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்டுள்ளது. அதன்படி,

தற்போது இந்தியா- தென் ஆப்ரிக்கா

டெஸ்ட் :  2-வது டெஸ்ட் நாளை முதல் 7-ந் தேதி வரை ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடக்க உள்ளது. 3-வது டெஸ்ட் வரும் 11 முதல் 15 வரை கேப்டவுன் மைதானத்தில் நடக்கிறது.

ஒருநாள் : தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் வருகின்ற 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி மோத உள்ளது. 

பிப்ரவரி - வெஸ்ட் இண்டீஸ் v இந்தியா

ஒருநாள்: பிப்ரவரி மாதம் 6, 9 மற்றும் 12-ந் தேதிகளில் அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா மைதானங்களில் நடக்க உள்ளது.

டி 20 : பிப்ரவரி மாதம் 15, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கட்டாக், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய மைதானங்களில் நடக்க உள்ளது.

பிப்ரவரி&மார்ச் - இலங்கை v இந்தியா 

டெஸ்ட் : முதல் ஆட்டம் பிப்ரவரி மாதம் 25 முதல் மார்ச் 1-ந் தேதி வரை பெங்களூரிலும், 2-வது டெஸ்ட் மார்ச் மாதம் 5 முதல் 9- ந் தேதி வரை மொகாலியிலும் நடக்கிறது.

டி 20 : மார்ச் மாதம் 13, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மொகாலி, தர்மசாலா, லக்னோ ஆகிய மைதானங்களில் நடக்க உள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் சர்வதேச ஆட்டங்கள் எதுவும் இந்தியா அணிக்கு கிடையாது. அதே சமயத்தில் ஐ.பி.எல். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது.

ஜூன் - இந்தியா v தென் ஆப்ரிக்கா

தென் ஆப்பிரிக்க அணி ஜூன் மாதம் இந்தியா வருகிறது. ஐந்து டி 20 ஆட்டத்தில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் டி 20 ஆட்டம் நம்ம சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஜூன் 9-ந் தேதி நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து அதைத் ஜூன் 12, 14, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பெங்களூர், நாக்பூர், ராஜ்கோட், டெல்லி ஆகிய மைதானங்களில் நடக்க உள்ளது.

ஜூலை - இந்திய v இங்கிலாந்து

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, கடந்த சுற்றுப் பயணத்தின்போது ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் ஆட்டத்தை ஜூலை 1 முதல் 5-ந் தேதி வரை மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் ஆடுகிறது. பின்னர்,

டி 20 : ஜூலை 7, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும், 

ஒருநாள் : ஜூலை 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

இதனை தொடர்ந்து, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது,  அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பையில் விளையாடுகிறது. அக்டோபருக்கு பின் இந்திய அணி வங்காளதேசத்துக்கு செல்கிறது. இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை

அக்டோபர் மாதம் 20 ஓவர் உலக கோப்பை

16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND v SA T20 Match in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->