INDvsAUS| ஒரே ஓவரில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான ஆஸ்திரேலிய வீரர்!
IND vs AUS Cameron Green Worst Bowling new Record
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின், முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரண்டாவது போட்டி இந்தூரில் நடைபெற்று வரும் நிலையில், முதல் பாதியில் இந்தியா 399 ரன்களை குவித்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நொந்து போனார்கள்.
குறிப்பாக ஆஸ்திரேலியா அணி ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் பந்தை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இதன் மூலம் சில மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக ஆகியிருக்கிறார். குறிப்பாக க்ரீனின் ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்களை சூரியகுமார் யாதவ் பறக்க விட்டதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 26 ரன்களை கொடுத்து மோசமான பந்துவீச்சு பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக மிகவும் அதிக ரன்களை வழங்கிய வீரர்கள்!
0/106 - நுவான் பிரதீப் (SL), மொஹாலி, 2017
0/105 - டிம் சவுத்தி (NZ), கிறிஸ்ட்சர்ச், 2009
2/103 - கேமரூன் கிரீன் (AUS), இந்தூர், 2023
3/100 - ஜேக்கப் டஃபி (NZ), இந்தூர், ௨௦௨௩
ஆஸ்திரேலியா சார்பில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர்கள்!
0/113 - மிக் லூயிஸ் vs SA, ஜோகன்னஸ்பர்க், 2006
0/113 - ஆடம் ஜம்பா vs SA, செஞ்சுரியன், 2023
2/103 - கேமரூன் கிரீன் vs IND, இந்தூர், 2023
0/100 - ஆண்ட்ரூ டை vs ENG, நாட்டிங்ஹாம், 2018
3/92 - ஜே ரிச்சர்ட்சன் vs ENG, நாட்டிங்ஹாம், 2018
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா சார்பில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஓவர்கள்
26 - சைமன் டேவிஸ் vs இங்கிலாந்து, பெர்த், 1987
26 - கிரேக் மெக்டெர்மாட் vs தென்னாப்பிரிக்கா, செஞ்சுரியன், 1994
26 - சேவியர் டோஹெர்டி vs இந்தியா, பெங்களூரு, 2013
26 - ஆடம் ஜம்பா vs தென்னாப்பிரிக்கா, செஞ்சுரியன், 2023
26 - கேமரூன் கிரீன் vs இந்தியா, இந்தூர், 2023
மேற்கண்ட மோசமான பந்துவீச்சு சாதனை பட்டியலில் கேமரூன் கிரீன் இடம்பெற்று இருக்கிறார். இன்றைய போட்டி அவருடைய வாழ்நாளில் மறக்க வேண்டிய போட்டியாக இருக்கும். அதே சமயம் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சற்று ஆறுதல் தேடிக்கொண்டார்.
English Summary
IND vs AUS Cameron Green Worst Bowling new Record