தொடரை வெல்லுமா இந்தியா? அயர்லாந்து அணியுடன் இன்று 2வது டி20 போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மழை குறிக்கிட்டதால் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால், சொந்த மண்ணில் தொடரை தக்க வைக்க அயர்லாந்து அணி கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா அயர்லாந்து அணிகள் இதுவரை 6  டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ய அயர்லாந்து அணியை கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணி விவரம்

அயர்லாந்து அணி 11 வீரர்கள் :

பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.

இந்தியா அணி 11 வீரர்கள் :

ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரின்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs IRE 2nd T20 match today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->