தோல்விக்கு நான்தான் காரணம் - விரக்தியுடன் ரோஹித் சர்மா பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது, இதில், நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவிக்கையில், "சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைவது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், அணியை சிறப்பாக கட்டமைக்க முடியவில்லை, தானும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை, ஒரு முழுமையான அணியாக நாங்கள் தோற்றுவிட்டோம். நியூசிலாந்து அணி எங்களைவிட சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

இத்தொடரில் இந்திய அணி பல தவறுகளைச் செய்ததாகவும், குறிப்பாக முதல் 2 போட்டிகளில் முதல் இன்னிங்சில் போதுமான ரன்கள் சேர்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்ட ரோஹித், இலக்கை எளிதாக அடைய முடியாமை தோல்விக்கான காரணமாக இருந்தது எனவும் விளக்கினார்.

அணியில் இருக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாடவேண்டும். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட தவறியதால் இந்தத் தோல்வியை முழுமையாக ஏற்கின்றேன் என்று தெரிவித்தார்.

இந்த தொடரை பொறுத்தவரை ரிஷப் பண்ட், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடியதையும் ரோஹித்  குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ test Rohit Sharma press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->