ஆசிய ஹாக்கி தொடர்.! நடப்புச் சாம்பியனை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி.!!
India beat South Korea to qualify to semi finals of Asian Hockey Series
ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி.!!
ஏழாவது ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான தென்கொரியாவை இந்தியா வீழ்த்தி அரையிறுதிக்கு பெற்றுள்ளது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த லீக் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை இந்தியா விழித்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மொத்தமாக 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தரப்பில் நீலகண்ட ஷர்மா, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு போல் அடித்தனர்.
தென் கொரிய அணி தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் ஆகியோர் தலா ஒரு போல் அடித்தனர். இறுதி வினாடி வரை போராடிய தென்கொரிய அணியால் கோல் அடிக்காத முடியாததால் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
இந்த தொடரில் தற்பொழுது இந்தியா 10 புள்ளிகளுடனும், மலேசியா 9 புள்ளிகளுடனும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. தென்கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கான போட்டியில் தொடர்கின்றன. இந்த தொடரில் இருந்து சீன அணி வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
India beat South Korea to qualify to semi finals of Asian Hockey Series