ஆட்டத்தை திருப்பிய இர்பான் பதான்! ஆசியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய இந்தியா லெஜெண்ட்ஸ்!   - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா லெஜென்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜென்ஸ் அணி. 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜென்ஸ் அணியும் ஆஸ்திரேலியா லெஜென்ஸ் அணியும் முதல் அரையிறுதி போட்டியில் மோதினர். நேற்று தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்திருந்தபோது மழையின் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. அதனை அடுத்து ஆட்டமானது இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் மேற்கொண்டு 3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் குவிக்கவே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக பென் டங் 46 ரன்களையும் டூலான் 35 ரன்கள்  குவித்தனர். இந்திய அணி தரப்பில் அபிமன்யு மிதுன் யூசுப் தான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா தனது இன்னிசை தொடங்கியிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 10 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ரெய்னா 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். யுவராஜ் சிங் 18 ரன்களிலும், பின்னி 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த யூசுப் பதான் 1 ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய ரசிகர்கள் தலையில் கைவைத்து கவலையில் உறைந்தனர். 

இறுதி நம்பிக்கை நட்சத்திரமாக வந்த இர்பான் பதான் எதிர்ப்பார்த்தது போலவே கைகொடுத்தார். 19 ஆவது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய பதான் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். மறுமுனையில் இறுதி வரை போராடிய நமன் ஓஜா மட்டும் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் பதான் பவுண்டரியுடன் இந்தியா 175 ரன்களை எட்ட, அவர் 12 பந்துகளில் 2 பபுண்டரி 4 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் குவித்தார். இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India legends beat Australia legends in semi final at Road safety world series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->