மீண்டும் கோப்பையை கைப்பற்றுவாரா சச்சின்?! பைனலில் இலங்கையுடன் மோதல்!
India legends master move to send vinay kumar as finch hitter ahead of yuvraj singh
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் முன்னாள் வீரர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று நடைபெறுகிறது. ராய்ப்பூரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய லெஜென்ஸ் அணியும் ஸ்ரீலங்கா லெஜென்ஸ் அணியும் விளையாடுகின்றன.
கடந்த வருடம் நடைபெற்ற முதல் போட்டி தொடரிலும் இதே இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதியதில், இந்திய அணி வெற்றிவாகை சூடியது. இந்த முறையும் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தங்களது அபிமான முன்னாள் வீரர்கள் விளையாடுவதை பார்க்க ராய்ப்பூர் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டித் தொடர் ஆரம்பம் முதல் மழையினால் பாதிக்கப்பட்டதால், இந்தியா லீக் போட்டிகளில் இரண்டில் மட்டுமே விளையாடியது. மூன்று போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
அதே சமயம் மறுபுறம் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள இலங்கை அணி தோல்வியை காணாமல் நான்கு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இந்த போட்டி தொடரில் இலங்கை அணையின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் சரிசம பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது.
இந்திய அணி தரப்பிலும் பேட்டிங் பலமாக இருந்தாலும், பந்துவீச்சில் பலமான வீரர்கள் இல்லை என்பது பின்னடைவாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் நாமன் ஓஜாவும், பதான் சகோதரர்களும் தான் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறார்கள்.
டாஸ் வென்ற இந்தியன் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் சந்தித்த முதல் பந்திலையே டக் அவுட் ஆகி கோல்டன் டக் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரெய்னாவும் ஒரு பவுண்டரி அடித்த திருப்தியுடன் அடுத்த பந்தையே தூக்கி கொடுத்துவிட்டு வெளியேறி விட்டார். அதனை அடுத்து பின்ச் ஹிட்டராக அனுப்பப்பட்ட வினய் குமார் இலங்கை பந்துவீச்சை விளாசி வருகிறார்.
8 ஓவர்கள் நிறைவில் வினய் குமார் 14 பந்துகளில் 24 ரன்களும், நாமன் ஓஜா 32 பந்துகளில் 38 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது
English Summary
India legends master move to send vinay kumar as finch hitter ahead of yuvraj singh