இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டிக்கான தேதி மாற்றம்! - Seithipunal
Seithipunal


இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடரின் போட்டிக்கான தேதி மாற்றம் செய்யப்படவுள்ளது.

வருகின்ற அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் ஐசிசி இந்த தொடருக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தது.

இந்த தொடரின் முக்கிய போட்டியாக இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினம் நவராத்ரி பண்டிகை கொண்டாடப்படுவதால் பாதுகாப்பு வழங்குவதில் பெரும் பிரச்சனை ஏற்படும் என மாநில காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ஒரு நாள் முன்னதாக அக் 14-ஆம் தேதி நடத்துவது குறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இது குறித்து கடிதம் ஒன்றையும் பிசிசிஐ தரப்பில் அனுப்பப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியின் தேதியை மாற்ற பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

அக்டோபர் 14-க்கு இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மாற்றம் செய்யப்படும் நிலையில், ஹைதராபாத்தில் அக்டோபர் 12-ஆம் தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் போட்டியும் மாற்றப்படவுள்ளதால், இந்த வார இறுதிக்குள் புதிய அட்டவணையை ஐசிசி வெளியிடவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India-Pakistan World Cup match date change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->