இந்திய அணி 159 ரன்களை வெஸ்டன் ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது! - Seithipunal
Seithipunal


சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இரண்டு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி உடன் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் முதல் பயிற்சி ஆட்டம் இன்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் ரிஷப் பண்ட்டும் களமிறங்கினர். 

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய தீபக் ஹூடா 22 ரன்களுக்கு அவுட் ஆனார். பவர் ப்ளே முடிவில் இந்திய அணி 6 ஓவருக்கு 39 ரன்கள் எடுத்து 2 விக்கெட் இழந்திருந்தது. பொறுமையாக விளையாடிய ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆண்ட்ரிவ் டை பந்தில் தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்தார். 

பின்னர் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இணைந்து 50 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் பாண்டியா 27 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய சூரியகுமார் யாதவ் தனது அரை சதத்தை 14 வது ஓவரில் பதிவு செய்தார். அந்த தருணத்தில் இந்திய அணியின் ஸ்கோர் 129-4 என இருந்தது. 

15ஆவது ஓவரிலேயே 52 ரன்கள் எடுத்து சூரியகுமார் யாதவ் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 158 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் விஸ்டன் ஆஸ்திரேலிய அணிக்கு 159 என்ற இலக்கை இந்தியா நிர்ணயத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India set a target of 159 runs for Western Australia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->