3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று 7மணிக்கு நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொலார்ட் முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தார்.

அதேபோல், இன்றைய போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார், சஹால் ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். 

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 65 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 35 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன்மூலம் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என அனைத்து போட்டிகளிலும் வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs West Indies 3rd t20 india won by 17 runs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->