இந்திய அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா..தமிழக வீரருக்கு வாய்ப்பு.!
India vs West Indies series replacement indian players
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் மற்றும் கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 6, 9, 11 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகளும், 16, 18, 20 ஆகிய தேதிகளில் இருபது ஓவர் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் அகமதாபாத் வந்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், நெட் பவுலர் நவதீப் சைனி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் 18 பேர் கொண்ட இந்திய அணியில் 15 பேர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே மாற்று வீரராக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இஷான் கிஷான், தமிழக வீரர் ஷாருக்கான் ஆகியோர் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரியவந்துள்ளது. போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதால் மாற்று வீரர்களை தயார் செய்வதில் பிசிசிஐக்கு எந்த சிக்கலும் இல்லை.
English Summary
India vs West Indies series replacement indian players