இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி.!
India west indies cricket match
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகலும், மூன்று இருபது ஓவர் போட்டிகளும் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியையும் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரிஷப் பண்ட்டுக்கு பதில் ஷிகர் தவன் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் துவக்க ஆட்டக்காரராக இல்லாமல் நடுவரிசையில் களமிறக்கப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத விதமாக ரிஷப் பந்த் ஓபனராக களமிறங்கினார். அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அன்வே ரிஷப் பந்த் மீண்டும் நடு வரிசையில் களமிறக்கப்படலாம். நடு வரிசையில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல், இனி வரும் போட்டிகளிலும் நடுவரிசையில் தான் களமிறக்கப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனென்றால் கே.எல். ராகுலை பொறுத்தவரை எந்த இடத்தில் களமிறங்கினாலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
இரண்டாவது ஆட்டம் முடிந்த பின் ரோஹித் ஷர்மா அளித்த பேட்டியில் ரிஷப் பண்ட் தொடர்ந்து துவக்க வீரராக களமிறக்க வாய்ப்பிலை என்பது உறுதியாக தெரிந்தது. மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடஙக உள்ளது. இதனைபடுத்து மூன்று இருபது ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
India west indies cricket match