இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இந்தியா.! - Seithipunal
Seithipunal


ராஞ்சியில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 353 ரன்கள் எடுத்தது. நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா, துருவ் ஜுரலின் அபார ஆட்டத்தால் 307 ரன்கள் சேர்த்தது. 

 

46 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா நிதானமாக விளையாடியது. கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்களை இங்கிலாந்து பவுலர்கள் வீழ்த்தினாலும் சுப்மன் கில் மற்றும் துருவ் நிதானமாக நின்று ஆடினார்கள். 

இறுதியில் இந்திய அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india won 4th test match in ranji


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->