கோலி, ராகுல் பொறுப்பான ஆட்டம்! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!  - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடைபெற்ற உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்  மோதியதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என கருதி பேட்டிங் தேர்வு செய்த நிலையில், ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்ததையடுத்து, பேட்டிங் கடினமாக இருந்தது. டேவிட் வார்னர் 41 ரன்களிலும் ஸ்டிவன் ஸ்மித் 46  ரன்களிலும் ஆட்டம் இழக்க அடுத்து வந்த ஆஸ்திரேலியா வீரர்கள் வரிசையாக வெளியேற ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய  ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், குல்திப் யாதவ், ஜஸ்டின் பும்ரா தலா இரண்டு விக்கெட்களையும், முகமது சிராஜ், ஹார்டிக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

எளிய இலக்கு தானே இந்தியா எளிதாக வெற்றி பெறும் என நினைத்தவர்களுக்கு எல்லாம் தலையில் பேரிடியாக விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் அடுத்தடுத்து டக் அவுட் ஆக, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நான் மட்டும் விதிவிலக்கா என்ன டக் அவுட் ஆகி வெளியேறினார். 

மூன்று பேருமே டக் அவுட் ஆக அண்ட் இரண்டு ரன்கள் எங்கிருந்து வந்தது என நீங்கள் கேட்கலாம், மறுமுனையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோலியாலும் அந்த ரன்கள் எடுக்கப்படவில்லை. உதிரி வகையில் ஆஸ்திரேலியாவினால் கொடுக்கப்பட்டது.

ரோஹித் ஷர்மாவுக்கு கொஞ்சம் கடினமான பந்து என்று சொன்னாலும், இஷான், ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த விதத்தினை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடுகளத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் விளையாட இது 20 ஓவர் போட்டி அல்ல என யாராவது அவர்களிடம் சொல்வார்களா?!

கோலியுடன் ராகுல் இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றனர். இந்த இணை நான்காவது விக்கெட்டுக்கு, 163 ரன்களை எடுத்த போது பிரிந்தது. மிகச்சிறப்பாக ஆடி வந்த கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பினை இழந்தார். பின்னர் ராகுலுடன் இணைந்த ஹர்டிக் பாண்டியா ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். ராகுல் 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா 41.2 ஓவர்களில் 201 ரன்களை அடித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the world cup league match by 4 wickets against Australia at chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->