IPL முடிந்ததும் உலகக்கோப்பை.. நியூயார்க் புறப்பட்ட இந்திய அணியினர்..! - Seithipunal
Seithipunal


IPL தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்க நியூயார்க் நகரத்திற்கு மும்பையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிந்து லீக் சுற்றில் மோதவுள்ளன. இதையடுத்து ஒவ்வொரு பிரிவிலும்  லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் அடுத்தகட்ட போட்டிகளான 'சூப்பர் 8' போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் 'A' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா லீக் சுற்றில் அமெரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் மோதவுள்ளது. இந்நிலையில் இந்தியா தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியுடன் வரும் ஜூன் 5ம் தேதி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

முன்னதாக இந்தியா - வங்கதேசம் இடையே ஜூன் 1ம் தேதி நடக்கவுள்ள பயிற்சி ஆட்டதிற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ரோஹித் சர்மா (கேப்டன்) மற்றும் ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்) தலைமையில் ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியினர் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Cricket Team flying to NewYork for WorldCup Series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->