2023 உலகக்கோப்பை.. 8400 கி.மீ தூரம் பயணிக்கும் இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


இந்திய அணி உள்ளூர் மற்றும் வெளியூர் தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும் ஐசிசி தொடர்களில் கோட்டை விட்டு விடுகிறது. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.

இந்த நிலையில் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

இந்த உலகக் கோப்பையை கைப்பற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இதில் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில்  9 மைதானங்களில் லீக் போட்டிகளை விளையாட உள்ளது.

இதற்காக இந்திய அணி 34 நாட்களில் 8400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க உள்ளனர். ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் 9700 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்.

இந்த பயணங்கள் எல்லாம் விமானத்தில் தான் என்றாலும் கூட 100 ஓவர்கள் மைதானத்தில் விளையாடிவிட்டு இரவு 11 மணிக்குள் தங்கள் போட்டியை முடித்த பிறகு அடுத்த போட்டிக்காக விமானத்தை பிடிக்க வேண்டும். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது சோர்வை அளிக்கும்.

ஒவ்வொரு போட்டிக்கும் 3 நாட்கள் இடைவெளி இருந்தாலும் வீரர்களின் பயிற்சிக்கு போதுமான நேரம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளை விட இந்திய அணி தான் அதிக தொலைவு பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team travelling 8400 km in 2023 World Cup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->