அந்த காரணத்தினால் நான் மூன்று முறை தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன் - இந்திய வீரர் முகமது ஷமி பகீர்.!
Indian cricketer Mohammad Shami SAY hought of suicide three times
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தான் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள தான் எண்ணியதாக, கேப்டன் ரோகித் சர்மா உடனான இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த உரையில், "என்னுடைய தனிப்பட்ட காரணங்களால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நேரம் அது. அந்த நேரத்தில் நான் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.
அப்போது மட்டும் என் குடும்பம் ஆதரவு கொடுக்காமல் போயிருந்தால், எனது கிரிக்கெட் வாழ்க்கை காணாமல் போயிருக்கும். என் குடியிருப்பு 24 மடியில் உள்ளது. நான் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று, என்று நண்பர்கள் சிலர் எப்போதும் என்னுடன் இருப்பார்கள்.
பின்னர், அதிலிருந்து மீண்டு வர டேராடூன் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினேன்” என்று முகமது ஷமி தெரிவித்தார்.
இந்திய அணிக்காக 60 டெஸ்ட், 79 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள முகமது ஷமி, 386 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.
நடக்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian cricketer Mohammad Shami SAY hought of suicide three times