இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது ஷமி புதிய சாதனை.!!
indian fest bowlers shami and bumrah new record
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர்கள் வீசிய பந்துகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெடுகளை பறிகொடுத்தனர்.
இங்கிலாந்து அணி 25.2 ஓவருக்கு 110 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா-6 விக்கெட், முகமது ஷமி-3 விக்கெட், பிரசித் கிருஷ்ணா-1 விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்சின் 10 விக்கெட் விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்ச்சியது இது 7-வது முறையாகும்.
இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
அதேபோல சர்வதேச ஒரு நாள் போட்டியில் இதுவரை 10 இந்தியர்கள் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார். ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுக்கு 6 விக்கெட், கும்பிளே 12 ரன்னுக்கு 6 விக்கெட், பும்ரா 19 ரன்னுக்கு 6 விக்கெட், ஆஷிஷ் நெஹரா 23 ரன்னுக்கு 6 விக்கெட், குல்தீப் யாதவ் 25 ரன்னுக்கு 6 விக்கெட், முரளிகார்த்திக் 27 ரன்னுக்கு 6 விக்கெட், அஜித் அகர்கர் 42 ரன்னுக்கு 6 விக்கெட், யுஸ்வேந்திர சாஹல் 42 ரன்னுக்கு 6 விக்கெட், அமித் மிஸ்ரா 48 ரன்னுக்கு 6 விக்கெட், ஸ்ரீசாந்த் 55 ரன்னுக்கு 6 விக்கெட், ஆஷிஷ் நெஹரா 59 ரன்னுக்கு 6 விக்கெட் ஆகியோர் 6 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள்.
English Summary
indian fest bowlers shami and bumrah new record