"எனது முதல் போட்டி; கோல்".. மறக்க முடியாது.. ஓய்வை அறிவித்தார் இந்தியாவின் மெஸ்ஸி.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் நட்சத்திர கால்பந்து வீரரும் கேப்டனமான சுனில் சேர்க்கிற சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 39 வயதாகும் இந்தியாவின் மெஸ்ஸி என போற்றப்படும் சுனில் சேத்ரி இந்தியாவுக்காக 145 சர்வதேச போட்டிகளின் விளையாடி 93 கோல் அடித்துள்ளார். 

2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஃபீபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தகுதி பெரும் சுற்றில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. வரும் ஜூன் 6ம் தேதி குவைத் அணிக்கு எதிராக நடைபெறும் கால்பந்து போட்டியுடன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோவில் குறிப்பாக "இந்த வீடியோவில் நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் எனது முதல் போட்டியில் விளையாடியது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

எனது முதல் போட்டி மற்றும் எனது முதல் கோழை எனது பயணத்தின் மறக்க முடியாத தருணமாக நினைக்கிறேன். நாட்டிற்காக இவ்வளவு போட்டிகளில் விளையாடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. நான் ஓய்வு பெற முடிவு செய்தபோது முதலில் மனைவியிடமும் பெற்றோரிடமும் கூறினேன்" என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மெஸ்ஸி என அழைக்கப்பட்ட ராகுல் சேத்ரி சர்வதேச அளவில் ரெனால்ட் மற்றும் மெஸ்சிக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் சேத்ரியின் இந்த ஓய்வு அறிவிப்பு இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian football team captain Sunil Chhetri announced retirement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->