T20 உலகக்கோப்பையை கண்டிப்பாக இந்த அணிதான் வெல்லும் - அடித்து சொல்லும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.!
Indian team likely win T20 World Cup
ஐசிசி 8வது டி20 உலக கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து சூப்பர் 12 போட்டிகள் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 23ம் தேதி விளையாடுகிறது. இந்த நிலையில் உலக கோப்பை குறித்து அந்தந்த அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலகக் கோப்பை குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார். அந்த வகையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். நான் இந்தியன் என்பதால் இதனை கூறவில்லை இரு அணிகளின் பலத்தை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலியா மைதானங்களில் இந்திய அணி நன்றாக விளையாடும் என கூறியுள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இந்தியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.
இறுதியாக இந்திய அணிக்கு இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதுள்ள இந்திய அணி பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என எனக்கு தோன்றிகொண்டே இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Indian team likely win T20 World Cup