பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian team won by 13 runs in practice match
சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகளை எடுத்தார்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இரண்டு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி உடன் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் முதல் பயிற்சி ஆட்டம் இன்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் ரிஷப் பண்ட்டும் களமிறங்கினர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 158 இரண்டு ரன்கள் 6 விக்கெட்களை இழந்தது. இந்திய அணி தரப்பில் சூரியகுமார் யாரோ 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம் வெஸ்டன் ஆஸ்திரேலிய அணிக்கு 159 என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் இருந்து தனது விக்கெட்டை இழந்து வந்தது. முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் வந்த அர்ஷதீப் சிங், யுசேந்திர சாகல் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் யுசேந்திர சாகல் மற்றும் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
English Summary
Indian team won by 13 runs in practice match