தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது ஏற்கனவே நடைபெற்ற முடிந்த டி20 தொடரை இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் பறிகொடுத்த நிலையில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற நிலையில் 2வது ஒருநாள் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கவிடம் இழந்தது.
ஒரு நாள் தொடர் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நேற்று கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் முதல் இரு ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றிருந்த ருத்ராஜ் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராஜட் பண்டிதர் அணியில் சேர்க்கப்பட்டார். 

இதனை அடுத்து இந்திய அணியின் தொடக்க வீரராக சாய் சுதர்சன் மற்றும் ராஜட் பண்டிதர் ஆகியோர் களமிறங்க நிலையில் இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனை அடுத்து 3வது விக்கெட் களமிறங்கிய சஞ்ஜீவ் சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு பொறுப்புடன் விளையாடி 114 பந்துகளை எதிர் கொண்டு 108 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்களில் திலக் வர்மா மட்டும் 77 பந்துகளை எதிர் கொண்டு 52 ரன்களை குவித்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறிய நிலையில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 296 ரன்கள் குவித்தது.


தென் ஆப்பிரிக்க அணி 297 என்ற இலக்குடன் களமிறங்க நிலையில் தொடக்க வீரராக களம் இறங்கிய டோனி டி சோர்ஸி 87 பந்துகளுக்கு 81 ரன்கள் குவித்த போது அவுட் ஆகி வெளியே பிறகு தென்னாபிரிக்க அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் தென்னாபிரிக்க அணி ௪௫.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. 

இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் ஒரு வருட கால அட்டவணையில் அதிக ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் 27 வெற்றிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 30 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை இந்திய அணி 6 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. அதேபோன்று இது தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி கைப்பற்றும் 2வது ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian team won the ODI series against South Africa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->