முதல் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
Indian team won the toss in the first practice match and chose to bat
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களம் இறங்கியுள்ளனர்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இரண்டு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி உடன் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் முதல் பயிற்சி ஆட்டம் இன்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் ரிஷப் பண்ட்டும் களமிறங்கினர்.
இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்ஷதிப் பட்டேன், புவனேஸ்வர் குமார், ஹர்ஷதீப் சிங், யுகேந்தர சாகல் ஆகியோர் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி, கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் களம் இறங்கவில்லை.
English Summary
Indian team won the toss in the first practice match and chose to bat