ஒலிம்பிக்கில் சாதித்த நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்குத் தகுதி..!!
Indias Neeraj Chopra Qualifies For Final in Olympic in Javelin Throw
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலுக்கான தகுதிச்ச சுற்று இன்று நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட இந்த ஈட்டி எறிதல் போட்டியில் மொத்தம் 32 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 'பி' பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் நீரஜ் சோப்ரா, தனக்கு வழங்கப் பட்ட முதல் வாய்ப்பிலேயே 89. 34 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து அனைவரையும் ஆச்சர்யப் படுத்தினார். இந்த சீஸனின் மிகச் சிறந்த தூரம் இது தான் என்று அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது. மேலும் இதன் மூலம் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கும் தகுதியாகி உள்ளார்.
மேலும் இன்னொரு பிரிவில் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர் அர்ஸத் நதீமும் தனது முதல் முயற்சிலேயே 86. 59 மீ தூரம் வீசி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதே பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரரான கிஷோர் சேனா 80. 21 மீ தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்ததால் இந்தத் தொடரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.
இதையடுத்து ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டியானது வரும் ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 11. 55 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் 87. 58 மீ தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அப்போது அவர் இந்தியா சார்பில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indias Neeraj Chopra Qualifies For Final in Olympic in Javelin Throw