உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.!
India's Pragyananda defeats world chess champion Magnus Carlsen again
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
செஸ் போட்டியில் உலக சாம்பியனான நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. தற்போது 11-ம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்துள்ளார்.
இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இரண்டாவது முறையாக இந்த ஆண்டில் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கால் செய்திருந்தார் 16 வயதான பிரக்ஞானந்தா.
நவம்பர் மாதம் வரை நடைபெறும் CHESSABLE MASTERS தொடரில் 3-வது சுற்று முடிந்து, 4வது சுற்றி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
English Summary
India's Pragyananda defeats world chess champion Magnus Carlsen again