15 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டியில் தனது கணக்கை தொடங்கிய தினேஷ் கார்த்திக்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தால் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி ரன்களை குவித்தனர். ஹர்திக் பாண்டியா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 55 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது எடுத்து. 

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.  16.5 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்னுக்கு அவுட் ஆனது. இதனால் 82 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அவேஷ்கா 4 விக்கெட்களையும், சாஹல் 2 விக்கெட்களையும், ஹர்சல் படேல், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்தப் போட்டியில் 55 ரன்கள் எடுத்ததன் மூலம் தினேஷ் கார்த்திக், சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 2006ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கி, 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் அரை சதத்தை தினேஷ் கார்த்திக் பூர்த்தி செய்துள்ளார். தினேஷ் கார்த்திக் தனது முதல் டி20 போட்டியில் விளையாடியபோது இந்திய அணியில் இருந்த அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

International first T20 half century for Dinesh Karthik


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->