அடித்தளம் போட்ட ஐ.சி.சி!! ஐ.ஓ.சி காட்டி பச்சைக்கொடியால் மீண்டும் கிரிக்கெட்!! குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்!!
Ioc accept recommend to include cricket in la 2028 Olympics
வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கடைசியாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. அடுத்த ஆண்டு மத்தியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது
பாரம்பரிய கிரிக்கெட் நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு அப்பால் விரிவடைவதற்கான உலகளாவிய அரங்குடன் கிரிக்கெட்டை ஒலிம்பிக்ஸ் வழங்கும்" என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை சேர்ந்த தாமஸ் பாக் கூறியுள்ளார். வரும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பச்சைக்கொடி காட்டியுள்ளதால் 1900ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் இடம் பெற்றிருக்கிறது.
ஐஓசி மற்றும் ஐசிசி ஆகியவை கிரிக்கெட்டின் உலகளாவிய ரீதியை விரிவுபடுத்த ஒன்றிணைகின்றன. அதே போன்று பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ioc accept recommend to include cricket in la 2028 Olympics