ஐபிஎல் 2015; லக்னோ அணியில் இணைந்த சென்னையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்..!
IPL 2015 Former Chennai pacer joins Lucknow team
ஐபிஎல் டி20 தொடரின் 10 வது சீசன் நாளை 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்திய உள்ளூர் போட்டியான இந்தத்தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப்கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்இடம்பெற்றுள்ளன. இந்த சீஸனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளை மோதுகிறது.

இந்த நிலையில், கடந்த தொடரில் சென்னை அணிக்கு விளையாடிய ஷர்துல் தாக்கூர் இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு விளையாடவுள்ளார். அதாவது, காயம் காரணமாக லக்னோ அணியில் இருந்து விலகிய மோசின் கானுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடன் இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
IPL 2015 Former Chennai pacer joins Lucknow team