MI Vs PBKS: சொதப்பல் ஆட்டமும், திடீர் திருப்பமும்.. மும்பைக்கு இப்படி சோகம் வரணுமா?..!
IPL 2021 Match 23 April 2021 MI Vs PBKS Team MI Declare 132 Runs to PBKS win
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் - மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாசை வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு செய்தது. மும்பை அணி பேட்டிங் செய்ய தயாராகியுள்ளது. மும்பை அணி சார்பாக ஆர் ஷர்மா, கியூ டி கோக், எஸ் யாதவ், ஐ கிஷன், கே பொல்லார்ட், எச் பாண்ட்யா, கே பாண்ட்யா, ஜே யாதவ், ஆர் சாஹர், ஜே பும்ரா, டி போல்ட் ஆகிய வீரர்கள் களமிறங்குகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக கே.எல்.ராகுல், எம் அகர்வால், சி கெய்ல், என் பூரன், டி ஹூடா, எம் ஹென்ரிக்ஸ், எஸ் கான், எஃப் ஆலன், ஆர் பிஷ்னோய், எம் ஷமி, ஏ சிங் ஆகியோர் களமிறங்குகின்றனர். இன்றைய போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இன்றைய ஆட்டம் சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

மும்பை அணியின் சார்பாக டி காக் - ரோஹித் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்க, முதல் ஓவரை ஹென்ரிக்ஸ் பஞ்சாப் அணியின் சார்பாக வீசினார். ரோஹித் ஷர்மா 5 ஆவது பந்திலேயே அவுட்டாகும் சூழ்நிலை இருக்க, ரிவிவ்யூ மூலமாக விக்கெட்டை தக்க வைத்தார். 1 ஓவரின் முடிவில் மும்பை அணி 4 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, டி காக் இறங்கி அடிக்க நினைக்க அது கேட்சை கொடுத்தது.
இதனால் டி காக் 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். 2 ஆவது ஓவரின் முடிவில் டி காக் அவுட்டாகி வெளியேற, அணி 2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரோஹித் 7 பந்துகளில் 4 ரன்கள் நடித்திருந்தார். டி காக்கின் விக்கெட்டை தொடர்ந்து ரோஹித் - கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. ரோஹித் - கிஷான் பஞ்சாபின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணற, 6 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே மும்பை எடுத்திருந்தது. 1 விக்கெட்டை மும்பை பறிகொடுத்து இருந்தது.

ரோஹித் 16 பந்துகளில் 13 ரன்கள் அடித்திருந்தார். இஷான் கிஷான் 15 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தார். இஷான் கிஷான் 17 பந்துகளில் 6 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். கிஸானின் விக்கெட்டை தொடர்ந்து ரோஹித் - சூரியகுமார் யாதவ் ஜோடி களமிறங்கியது. இருவரும் அணிக்கு ரன்கள் சேர்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 7 ஓவரில் 2 விக்கெட்டை பறிகொடுத்த மும்பை, 30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தால், ரசிகர்கள் இன்றைய போட்டியில் ரன்கள் மும்பையால் சேர்க்க முடியுமா? என்று திடீர் சோகத்திற்கு உள்ளாகினர்.
9 ஓவரில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் இருந்த ரோஹித் 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார். சூரியகுமார் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர், இருவரும் நின்று அடித்து ஆடியதால் அணியின் ரன்கள் உயர தொடங்கியது. 13 ஆவது ஓவர் தொடக்கத்தில் சூர்ய குமார் 17 பந்துகளில் 19 ரன்கள் நடித்திருந்தார். ரோஹித் 47 பந்துகளில் 39 ரன்கள் அடித்திருந்தார். மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.

ரோஹித் 52 பந்துகளில் 63 ரன்கள் அடித்து அவுட்டாக, சூரியகுமார் 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்து அவுட்டாகினார். இதனையடுத்து களத்தில் பொலார்ட் - எச்.பாண்டியா ஜோடி இருந்தது. 18 ஆவது ஓவர் தொடக்கத்தில் மும்பை அணி 4 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்திக் பாண்டியா 4 பந்துகளில் 1 ரன்கள் மட்டும் அடித்து சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் அவுட்டாகி வெளியேறினார்.
18.4 ஓவரில் அணி 122 ரன்கள் எடுக்க, 5 விக்கெட்டை மும்பை பறிகொடுத்தது. களத்தில் பொலார்ட் - கர்னல் பாண்டியா ஜோடி இருந்தது. க.பாண்டியா 3 பந்துகளில் 3 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். பொலார்ட் 12 பந்துகளில் 16 ரன்கள் அடித்திருந்தார். ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு, 131 ரன்கள் எடுத்தது. இதனால் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
IPL 2021 Match 23 April 2021 MI Vs PBKS Team MI Declare 132 Runs to PBKS win