#IPL2023 : மழை காரணமாக சென்னை - லக்னோ அணிகள் மோதும் போட்டி.. டாஸ் போடுவதில் தாமதம்.!
IPL 2023 45th match LSG vs CSK toss delayed due to rain
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
அதேபோல் 9 போட்டியில் விளையாடி உள்ள லக்னோ அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு லக்னோ மைதானத்தில் நடைபெறும் 45வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் தற்போது போட்டி நடைபெறும் லக்னோ மைதானத்தில் லேசான மழை பெய்வதால் டாஸ் போட ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . மேலும் பிட்ச் தற்போது மூடி வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறும். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாக முதலிடத்திற்கு முன்னேற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கடந்த போட்டியில் காயமடைந்தார். அதன் காரணமாக இன்றைய போட்டியில் கே எல் ராகுல் விலகியுள்ளார். எனவே இன்று லக்னோ அணியின் கேப்டனாக க்ருணல் பாண்டியா வழிநடத்த உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுவரை நேருக்கு நேர்
இவ்விரு அணிகளும் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், ஒரு போட்டியில் சென்னை அணியும், ஒரு போட்டியில் லக்னோ அணியும் வெற்றி பெற்றுள்ளது.
English Summary
IPL 2023 45th match LSG vs CSK toss delayed due to rain