#IPL2023 : எந்தெந்த வீரர்களுக்கு என்னென்ன விருதுகள்.. முழு விவரம்.!
IPL 2023 awards list
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாயும், இறுத்திப்போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், 3வது இடம் பிடித்த மும்பை அணிக்கு 7 கோடி ரூபாயும், 4வது இடம் பிடித்த லக்னோ அணி 6.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வாங்கப்பட்டது.
2023 ஐபிஎல் விருதுகள்
அதிக ரன்கள் 890 ரன்கள் - சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
அதிக விக்கெட்டுகள் (28 விக்கெட்டுகள்) - முகமது சமி (குஜராத் டைட்டன்ஸ்)
அதிக சிக்ஸர்கள் (36 சிக்ஸர்கள்) - பாப் டூப்பிளஸிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
அதிக பவுண்டரிகள் (82 பவுண்டரிகள்) - ஜெய்ஸ்வால் ( ராஜஸ்தான் ராயல்ஸ்)
அதிக மெய்டன் ஓவர்கள் (3 ஓவர்கள்) - ட்ரெண்ட் போல்ட் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
அதிக டாட் பால்கள் (188 டாட் பால்கள்) - முகமது சமி (குஜராத் டைட்டன்ஸ்)
மிக நீளமான சிக்ஸர் (115 மீட்டர் சிக்ஸர்) - பாப் டூப்பிளஸிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
சிறந்த கேட்ச் - ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்)
கேம் சேஞ்சர் - ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
மதிப்புமிக்க வீரர் : ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
சூப்பர் ஸ்டிரைக்கர் - க்ளென் மேக்ஸ்வெல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
வளர்ந்துவரும் வீரர் - ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ஃபேர்பிளே விருது - டெல்லி கேப்பிட்டல்ஸ்.