#IPL2023 : ரசிகர்களே ரெடியா.. இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.!
IPL 2023 final match tickets sale on today 11 AM
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
அதேபோல், நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
அதனைத் தொடர்ந்து மே 26ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியும், அதே மைதானத்தில் மே 28ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மே 28ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
English Summary
IPL 2023 final match tickets sale on today 11 AM